இலங்கையில் படம் பிடிக்கப்பட்ட செக்ஸி கலண்டர்! (காணொளி/படங்கள் இணைப்பு)

இந்தியாவின் கிங்ஃபிசெர் நீச்சல் உடைகள்-2012 கலண்டர் இலங்கையில் படம்பிடிக்கப்பட்டு உள்ளது. கடந்த ஒரு தசாப்தமாக கிங்ஃபிசெர் நீச்சல் உடைகள் கலண்டர் வெளியிடப்பட்டு வருகின்றது.

முதலாவது கலண்டர் மொறசியஸ் நாட்டில் படம் பிடிக்கப்பட்டது. இலங்கையில் உள்ள ஜெட்விங் ஹோட்டல்கள், கலங்கரை விளக்குகள், கடலோரங்கள் என்று மிக அழகான இடங்களில் பத்தாவது ஆண்டு நிறைவு கலண்டர் படம்பிடிக்கப்பட்டு உள்ளது.

உலக அழகிகளான Angela Jonsson, Maia Haydon, Saiyami Kher, Tena Desae, Mimi Blix ஆகியோருடன் NDTV இன் ரியாலிட்டி ஷோ விசேட நிகழ்ச்சி மூலம் தெரிவான அழகி ஒருவருமாக ஆறு அழகிகள் இக்கலண்டருக்கு போஸ் கொடுத்து உள்ளனர்.

பிரபல புகைப்பட கலைஞர் Atul Kasbekar படப் பிடிப்பை மேற்கொண்டு உள்ளார். கலண்டர் மிகவும் அழகாகவும், கவர்ச்சியாகவும், அற்புதமாகவும் காட்சி தருகின்றது.